ad

மாமன்னரை அவமதிக்கும் கானொளி; ஒரு நபர் கைது

13 செப்டெம்பர் 2025, 4:27 AM
மாமன்னரை அவமதிக்கும் கானொளி; ஒரு நபர் கைது

கோலாலம்பூர் – டிக்டாக் செயலியில் மாட்சிமை தங்கிய மாமன்னரை அவமதிக்கும் தன்மை கொண்ட வீடியோ பரவியதையடுத்து, போலீசார் 41 வயது ஆடவரை கைது செய்துள்ளனர்.

@muhammad.bin.abdu969 என்ற டிக்டாக் கணக்கில் நேற்று பதிவேற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த வீடியோவுடன் தொடர்பாக கைது மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார் .

விசாரனையில் அந்த நபருக்கு முன்பு மூன்று குற்றச்செயல் சம்பவ பின்னனி மற்றும் போதைப்பொருள் சம்பவம் தொடர்பான குற்றப் பதிவுகள் உள்ளது தெரியவந்துள்ளது.

சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்தி, தூண்டுதல், அவமதிப்பு அல்லது பொதுமக்களின் அமைதியையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.