ad

11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் சாலைப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது

13 செப்டெம்பர் 2025, 3:36 AM
11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் சாலைப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது
11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் சாலைப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது

கோலாலம்பூர், செப். 13- கோலாலம்பூர் போலீசார் நடத்திய Operasi Patuh Undang-Undang (Op PUU)-இன் விழிப்புணர்வு நிலையில், கடந்த செப்டம்பர் 6 முதல் இன்று வரை மொத்தம் 11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் சாலைப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் தெரிவித்தார்.

இந்நடவடிக்கை பொதுமக்கள் அடிக்கடி செய்யும் சிறிய அளவிலான போக்குவரத்து விதிமுறைகள் மீறுதல்களில் கவனம் செலுத்துகிறது. இந்த விழிப்புணர்வு நிலையை, பின்னர் அறிவிக்கப்படும் தேதிவரைத் தொடர்வதாகவும் அதன் பின், சாலை விதிமுறையை மீறுபவர்களுக்கு நேரடியாக சமன் வழங்கப்படும் என்று நேற்று இரவு ஊடகச் சந்திப்பில் கூறினார்.

பாதசாரிகள் மேம்பாலம் பயன்படுத்தாமை,போக்குவரத்து சிக்னலை மீழ்வது, சாலையில் தடங்கல் ஏற்படுத்துதல், சாலையில் நிற்கும்போது வெள்ளை கோட்டை மீறி நிறுத்துதல்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணியாதது, மாற்றியமைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் பயன்படுத்துதல் போன்றவை சாலை விதிமுறையை மீறுவதில் அடங்கும்.

தற்போது, இந்த நடவடிக்கை டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைமையகம் பகுதியை மையமாகக் கொண்டுள்ளது. பின்னர், கோலாலம்பூரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.