ஷா ஆலம், செப் 13- மலேசிய வானிலைத் துறை மெட்மலேசியா இன்று மதியம் 12 மணி வரை கோலாலங்காட் மற்றும் சிப்பாங் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், பினாங்கு, மலாக்கா, திராங்கானு, நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடர்ந்து மெட்மலேசியா அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my-யில் அல்லது அதிகாரபூர்வ சமூக ஊடகங்களைப் பின்தொடர்வும்.
மேலும் myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்து, சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.