ad

சிலாங்கூரில் சிறு திட்டங்களை மேற்கொள்ள பிரதமர் வெ.6.7 கோடி அங்கீகாரம் - மந்திரி புசார்

12 செப்டெம்பர் 2025, 10:12 AM
சிலாங்கூரில் சிறு திட்டங்களை மேற்கொள்ள பிரதமர் வெ.6.7 கோடி அங்கீகாரம் - மந்திரி புசார்

ஷா ஆலம், செப். 12- இவ்வாண்டு சிலாங்கூரில் பல்வேறு சிறு திட்டங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மொத்தம் 6 கோடியே 70 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஒதுக்கீட்டில் 4.4 கோடி  வெள்ளி  மக்கள் நட்புறவுத்  திட்டத்திற்கும் பொது/மக்கள் சார்ந்த உள்கட்டமைப்பு திட்டத்திற்கும் (பிந்தார்) (வெ.45 லட்சம்), சிவில் உள்கட்டமைப்பு திட்டத்திற்கும் (பிரிஸ்மா) (வெ.65 லட்சம்) மற்றும் எம்.எஃப்.ஓ. பிரிஸ்மா  (வெ.1.2 கோடி) திட்டத்திற்கும் செலவிடப்படும்  என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தை (ஆர்.எம்.எல்.டி.) பூர்த்தி  செய்வதோடு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் தோற்றத்தை  மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி அமைச்சின் அரசாங்க கொள்முதல் சுற்றறிக்கையின் அடிப்படையில் அந்தந்த மதிப்பு வரம்புகளுக்கு ஏற்ப விலைப்புள்ளிகள், வாக்குகள் மூலம் தேர்வு மற்றும் நேரடி பேரம் மூலம் பல அனுமதிக்கப்பட்ட கொள்முதல் முறைகள் உள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நல்ல உறவையும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பிரதமரின் அக்கறையையும் இந்த  நிதி ஒதுக்கீடு  பிரதிபலிக்கின்றது  என்று அவர் கூறினார்.

இன்று  மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற பிரதமரின் ஒதுக்கீட்டிற்கான வாக்கு முறை  பணி வாய்ப்பு கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

இந்த குலுக்கல்  முறையில்
மொத்தம் 82 லட்சம் வெள்ளி  மதிப்புள்ள 147 வெளிப்புறத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் 70.5 லட்சம் வெள்ளி செலவிலான   117 திட்டங்கள்  மசூதிகள் மற்றும் சூராக்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

உடனடியாக, இந்த உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 144 நியமிக்கப்பட்ட குத்தகையாளராகளுக்கு அமிருடின் சலுகைக் கடிதங்களையும் வழங்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.