ad

ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை திடீர் வெள்ளம்

12 செப்டெம்பர் 2025, 5:59 AM
ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை திடீர் வெள்ளம்

ஜோகூர் பாரு, செப் 12 - நேற்று பிற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

மாலை 6.30 மணி வரை பெய்த மழையால், தாழ்வான கட்டங்களில் வெள்ள நீர் புகுந்தோடியது. Lili கட்டடத்தில் மருத்துல உபகரணங்களையும், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றையும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவது 25 வினாடி வீடியோவில் பதிவானது.

இதன் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon அங்கு விரைந்தார்.

ஜோகூர் பாரு நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் தரவுகளின் அடிப்படையில், நேற்றைய கன மழைநீர் அளவு 70 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகியுள்ளது.

இதையடுத்து வடிகால் அமைப்பிற்குள் தண்ணீரை நேரடியாக வழித்தடத்தில் கொண்டு வர சாலையோரத்தில் ஒரு சிறிய வடிகால் கட்டுவதற்கு முன்மொழியப்படும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.