கோலாலம்பூர், செப். 11 - அடுத்தாண்டு செயல்படுத்தப்படவிருக்கும் ஐந்து முன்னெடுப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம் சிலாங்கூர் அரசு கிட்டத்தட்ட 100 கோடி வெள்ளி வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டா வாட்டர் குழுமம் மற்றும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் ஆகியவற்றை உள்ளடக்கி
சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (லுவாஸ் ) செயல்படுத்தும் பூஜ்ஜிய வெளியேற்றக் கொள்கையின் செயலாக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று
மாநில அரசு செயலாளர் கூறினார்.
இதன் வழி 98.7 கோடி வெள்ளிக்கும் அதிகமானதாக இருக்கும் என கருதப்படும் சாத்தியமான வருவாய் மற்றும் சிலாங்கூர் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் அலுவலகக் கட்டணங்களை மதிப்பாய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் 50 கோடி வெள்ளிக்கும் மிகாமல் கணக்குகளை முடிக்க இலக்கு நிர்ணயித்ததன் மூலம் இந்த வருமானம் ஈட்டப்படும் என டத்தோ டாக்டர் அகமது பாட்ஸ்லி அகமது தாஜுடின் விளக்கினார்.
குசெல் எனப்படுமு சிலாங்கூர் பயன்பாட்டு வழித்தடம் மூலம் மாநில பொதுப்பணித் துறையின் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில சாலைகளுக்கு மீட்டருக்கு 5 வெள்ளி பயன்பாட்டு சாலை கட்டண விகிதத்தை செயல்படுத்துவதும் இதில் அடங்கும் என்று அவர் இன்று சிலாங்கூர் 2026 பட்ஜெட் கலந்தாய்வு நிகழ்வில் அவர் கூறினார்.
எனினும், அடுத்தாண்டு அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டு முன்னெடுப்புகளை விரிவான ஆய்வை நடத்துவதற்கு ஏதுவாக ஒத்திவைக்கப்பட வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இது நீர் மேலாண்மை மற்றும் நில வரி தொடர்பான திருத்தங்களை உள்ளடக்கியது. இந்த முயற்சி மிகப்பெரியது மற்றும் முடிந்தவரை சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். நில விவகாரத்தைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் இதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம் என்று அவர் கூறினார்.