கோலாலம்பூர், செப் 10 - உயர்க் கல்வி கழக மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள், ஜாலோர் கெமிலாங் சின்னத்தை அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிடவில்லை.
தேசபக்தி கொள்கைகளை செயல்படுத்துவதும், அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் தற்போது அவ்விரு பிரிவினருக்கும் போதுமானதாகக் கருதப்படுவதாக தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர், செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
"இருப்பினும், இந்த பரிந்துரையை பொது சேவை துறை மற்றும் உயர்க் கல்வி அமைச்சு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யலாம்," என்றார் அவர்.
நாட்டின் மீதான அன்பை வலுப்படுத்தவும், தேசபக்தியின் மதிப்பை வளர்க்கவும், உயர்க் கல்வி கழக மாணவர்களும், அரசு ஊழியர்களும் ஜாலோர் கெமிலாங் சின்னத்தை அணிவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செனட்டர் சரஸ்வதி இவ்வாறு தெரிவித்தார்.
பெர்னாமா