சிப்பாங், செப் 9: எதிர்வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பாகன் லாலாங் கடற்கரையில் 2025 கடற்கரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிப்பாங் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரையும், மறுநாள் காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் கலாச்சார படைப்புகள், விளையாட்டுப் போட்டிகள், ஏரோபிக்ஸ், நாசி லெமாக், புட்டிங் சமையல் போட்டிகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கு ஆகியவை அடங்கும்.
'புஷ் பைக்' போட்டி, பாரம்பரிய விளையாட்டுகள், கடற்கரை ஃபுட்சல், கயிறு இழுத்தல், கரோக்கே மற்றும் சொந்தப் பாடல்களைப் பாடுதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறும்.
நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கு, கயாக்கிங், நீச்சல், மற்றும் படகோட்டம் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் தகவல்களை www.mpsepang.gov.my என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பெறலாம்.