ஷா ஆலம், செப் 9 – சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக விளங்கும் இலவசச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் எதிர்வரும் ஞாயிறு அன்று ஶ்ரீ கெம்பாங்கானில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 3 மணி வரை கொம்பெலெக்ஸ் 3கே எம்பிஎஸ்ஜேயில் நடைபெறும்.
செலங்கா செயலி வாயிலாகப் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.