கோலாலம்பூர், செப் 9 - நேற்று கெப்போங்கில் உள்ள மலேசியா வன ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (FRIM) அருகிலுள்ள ஓர் ஏக்கர் வனப்பகுதி தீப்பிடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு மாலை 4.24 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகக் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மட் முகிலிஸ் மொக்தார் கூறினார்.
சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திரம் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“சம்பவ இடத்தில், சுமார் ஒரு ஏக்கர் காடு தீப்பிடித்து எரிந்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.