ஷா ஆலம், செப். 9 - காஜாங் மற்றும் பாங்கி இந்தியர்களுக்காக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அடிப்படை பயிற்சிப் பட்டறை கடந்த 7ஆம் தேதி காஜாங், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், இ.டபள்யு.ஆர்.எஃப். காஜாங் ஸ்கந்தா மக்கள் சேவை மையத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி பட்டறைக்கு மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டார பேரவையின் மகளிர் மற்றும் இளைஞர் பகுதியினர் சுங்கை ராமல் இந்திய சமூகத் தலைவர் சிவக்குமார் அருணாச்சலம் ஏற்பாட்டு செய்திருந்தனர்
உயர்கல்வி மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது என்று மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டார பேரவையின் தலைவர் நடராஜா பொன்னுசேகர் வலியுறுத்தினார்.
எதிர்கால தொழில்நுட்ப அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பகிரப்பட்டது என அவர் கூறினார்.
வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என காஜாங் கவுன்சிலர் ஆர் தியாகராஜா அறிவுறுத்தினார்.
இந்திய இளைஞர்கள் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவை வளப்படுத்தும் வகையில் இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டாளரான மலேசிய இந்து சங்கம் காஜாங் வட்டார பேரவையின் மகளிர் பகுதி தலைவி திருமதி. கன்னிகா செல்வராஜூ மற்றும் இளைஞர் பகுதி பிரிவுத் தலைவர் ஹருண்குமார் சுப்பிரமணியம் குறிப்பிட்டனர்.
மலேசியாவின் தூரநோக்கு வெற்றியில் பங்கு கொள்ளத் தயாராகும் விதமாக சாட்ஜிபிடி மற்றும் ஏ.ஐ. நுணுக்கங்கள் தொடர்பான விளக்கக் குறிப்புகளை இலகுவான முறையில் பயிற்றுனர் தர்விந்திரன் ராவ் ஸ்ரீராமுலு வழங்கினார்.
இப்பயிற்சி பட்டறையில் காஜாங், பாங்கி வட்டார பகுதியிலிருந்து 25 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கே.கே.ஐ. செயலவை உறுப்பினர் பிரகாஷ் ஆர்குண்டன், மோகனதாஸ் சிவலிங்கம், சுஜாதா சுந்தர்ராஜு, இந்த சங்க காஜாங் பேரவையின் சமயப் பொறுப்பாளர் திருமதி வித்யா பத்துமலை, இ.டபள்யு.ஆர்.எஃப். காஜாங் ஸ்கந்தா மக்கள் சேவை மையப் பொறுப்பாளர்கள் ஆறுமுகம் அழகன், வடிவேலு பத்துமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஜாங், பாங்கி இந்தியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை
9 செப்டெம்பர் 2025, 4:32 AM