குவாந்தான், செப். 9 - முப்பதேழு வயதான முகமது ஷாஹாங்கிர் என்ற அந்த நபரின் உயிரைப் பலி கொண்ட இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.30 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ரவுப் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் முகமது ஷாஹ்ரில் அப்துல் ரஹ்மான் கூறினார். கோலாலம்பூரில் வசித்து வந்த ஷாஹாங்கிர் தனது தம்பியைக் காண்பதற்காக அந்த கட்டுமானப் பகுதிக்கு வந்து அங்குள்ள கொங்சி வீட்டில் தங்கியிருந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெரிவித்தார்.
தனது தம்பியைத் தேடி அந்த கட்டுமானப் பகுதிக்கு அவ்வாடவர் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. மின்னல் தாக்கியதன் விளைவாக அவரது கால்சட்டையின் இடது பகுதி கிழிந்திருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
உடனடியாக கோல லிப்பிசில் உள்ள கிளினிக் ஒன்றுக்கு அவ்வாடவர் கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய முகமது ஷாஹ்ரில், அவ்வாடவர் மரணமடைந்து விட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அவரது உடல் ரவுப் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார்.