ad

தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க பத்துதீகா தொகுதி  அழைப்பு

8 செப்டெம்பர் 2025, 10:28 AM
தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க பத்துதீகா தொகுதி  அழைப்பு

ஷா ஆலம், செப்.8 - எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தகுதி உள்ள குடும்பங்களுக்கு  இலவச தீபாவளி பற்றுச் சீட்டுகளை விநியோகிக்கும் பணியை அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும் தொடங்கியுள்ளன.

இதன் அடிப்படையில் பத்து தீகா தொகுதி இன்று செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை இந்த பற்றுச் சீட்டுகளுக்கான
விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 400 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்  பத்து தீகா தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அப்துல் ரஷிட் கூறினார்.

விண்ணதாரர்கள் பத்து தீகா தொகுதியைச் சேர்ந்தவர்களாகவும்  மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான குடும்ப வருமானத்தைக கொண்டவர்களாகவும்
இருக்க வேண்டும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார.

மூத்த குடிமக்கள் உதவித் திட்டம் (எஸ் எம்.யு.இ.) மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டம் மற்றும் (எஸ்.எம்.ஐ.எஸ்.) திட்டத்தின் இலவச பற்றுச் சீட்டு பெறுவோர் மற்றும் பிங்காஸ் பங்கேற்பாளர்கள்  தீபாவளி பற்றுச் சீட்டுத் திட்டத்தில் பங்குபெற முடியாது என அவர் சொன்னார்.

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் துணைவியரின் மைகார்ட் நகல், வாக்காளர் சான்று நகல் மற்றும் சம்பள அறிக்கையை உடன் கொண்டு வர வேண்டும்.
விண்ணப்பாரங்களை தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.