ஷா ஆலம், செப். 8 -மலேசியா தந்தையர் உரிமை சங்கம் சிலாங்கூரின் தந்தைகளின் விடுப்பை நீட்டிக்கும் திட்டத்தை முழுமையாக ஆதரித்துள்ளது. தற்போது வழங்கப்படும் ஏழு நாட்கள் விடுப்பு நிர்வாக பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்ற போதுமானதாக உள்ளது என அச் சங்கத் தலைவர் மால்கம் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
ஏழு நாட்கள் மட்டுமே வழங்கப்படுவதால், குழந்தை பிறந்த பின் மிக முக்கியமான முதல் வாரங்களில் பெரும்பாலான பொறுப்புகளைத் தாய் ஒருவரே சுமக்க வேண்டியதாகிறது. இது தாய்மார்களுக்கு சுமையாக இருப்பதோடு, தந்தைகள் தங்கள் பங்கை வகிக்க முடியாத நிலையை உருவாக்குகிறது.
“ஏழு நாட்களுக்கு மேல் விடுப்பு நீட்டிப்பது தந்தை தாயிக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பது. பெற்றோர்களாக இருப்பது ஒருவரின் பொறுப்பு மட்டும் அல்ல. இப்படிப்பட்ட கொள்கை மாற்றங்கள் தந்தையும் குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருப்பதை காட்டுகிறது,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி, சிலாங்கூர் மாநில EXCO அன்ஃபால் சாரி தெரிவித்தபடி, தந்தைக்கு வழங்கும் விடுப்பை தற்போதைய ஏழு நாட்களைக் காட்டிலும் நீட்டிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி, புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பில் தந்தையின் பங்கு அதிகரிப்பதையும், பெற்றோருக்குள் பகிர்ந்துகொள்ளும் பொறுப்புணர்வும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிலாங்கூர் மகளிர் கொள்கை மற்றும் செயல் திட்டம் 2024–2026 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
முதல் வாரங்கள் மிகவும் முக்கியமானவை. குழந்தையுடன் உறவை உருவாக்குவது தாய் மட்டும் அல்ல, தந்தைக்கும் தேவையானது. இந்த நேரம், குழந்தையின் மனநலத்திற்கும், தந்தையின் நம்பிக்கைக்கும் அடித்தளமாகிறது. அதே சமயம், தாயின் உடல் மற்றும் மனநிலை மீளும் காலமாகவும் இருக்கிறது, என்றார்.
மேலும் தற்போதைய ஏழு நாட்கள் விடுப்பு பெரும்பாலும் மருத்துவமனை ஆவணங்கள் மற்றும் குழந்தை பதிவு செய்வதற்கு செல்கிறது. இதனால், தாய்மார்கள் இன்னும் மீளும் நிலையில் இருக்கும்போது, பல தந்தைகள் வேலையில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
குடும்பத்திற்கு உகந்த கொள்கைகள் வழங்குவதில் நிறுவனங்களின் புகழையும், திறமையான பணியாளர்களை ஈர்க்கும் ஆற்றலையும் அதிகரிப்பதோடு, பணியாளர்கள் ஆரோக்கியமான மற்றும் குடும்பத்துடன் இருந்தால் வேலை கவனமும் உயரும்.
ப்யூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின் படி, தந்தைகள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் குறைந்து வருவதில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாம் தந்தைவழி விடுப்பை இழப்பாக பார்க்காமல் முதலீடாகப் பார்க்க வேண்டிய நேரம் இது. குறுகிய கால உற்பத்தி திறன் குறையக்கூடும், ஆனால் நீண்ட கால ஆதாயங்கள் மிக அதிகம்.
தந்தை விடுப்பை நீட்டிக்கும் திட்டத்தை ஆதரிக்கிறது மலேசியா தந்தையர் உரிமை சங்கம்
8 செப்டெம்பர் 2025, 7:44 AM