பாகான் டத்தோ, செப் 8 - ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மலேசிய தேடல் மற்றும் மீட்பு சிறப்பு குழுவை (ஸ்மார்ட்) அந்நாட்டிற்கு அனுப்ப மலேசியா திட்டமிட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரையை, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சாவிடம் தாம் தெரிவிக்கப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், SMART குழுவுடன் இணைந்து மலேசிய ராணுவப்படை, ATM-இன் அரச சுகாதார பிரிவும் அனுப்பப்படும் வகையில் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டினுடன் தாம் கலந்துரையாடவிருப்பதாகவும் சாஹிட் கூறினார்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, நள்ளிரவு ரிக்டர் 6.0ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல பின் அதிர்வுகளும் உணரப்பட்டன.
பெர்னாமா