ஷா ஆலம், செப் 8 : சிலாங்கூர் மழலையர் பள்ளி உதவித் திட்டத்திற்கான (TUNAS) புதிய பதிவு ஜூலை 1 முதல் திறக்கப்பட்டது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டண சுமையைக் குறைக்க உதவும்.
மாநில அரசின் கீழ் உள்ள இந்தத் திட்டம் தகுதியான குழந்தைகளுக்கு மாதத்திற்கு RM50 கட்டண உதவியை வழங்குகிறது. இந்த உதவி பணமாக அல்லாமல் பதிவுசெய்யப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.
இத்திட்டத்திற்கு சிலாங்கூர் குழந்தை பாரம்பரிய அறக்கட்டளையின் (யாவாஸ்) tunas.yawas.com.my வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று முகநூல் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மழலையர் பள்ளிகளின் முழுப் பட்டியலையும் https://tunasv2.yawas.my/admin/list_tadika.php என்ற இணைப்பின் மூலம் சரிபார்க்கலாம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான ஆரம்பக் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக வழங்கப்படும் சலுகைகளை பெறும் வாய்ப்பைத் தவறவிடாமல் இருக்க உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.