காஸா, செப். 8 - காஸா நகரில் பஞ்சம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வரும் வாரங்களில் இப்பிராந்தியத்தின் மையப் பகுதிக்கும் அது பரவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நிதி அமைப்பு (யுனிசெஃப்) எச்சரித்துள்ளது.
குடும்பங்கள் சிறு பிள்ளைகளுக்கு உணவு வழங்க அதிகளவில் முயற்சிகள் எடுக்காவிட்டால் காஸாவின் நிலைமை "பேரழிவாக" மாறும் என்று அந்த அமைப்பு எச்சரித்ததாக கத்தார் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதல் தீவிரமடைவதால் கடும் அபாயத்திற்கு ஆளாகியுள்ள காஸா நகரில், குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பேரழிவுக்கான அச்சுறுத்தல் நிதர்சனமானது என்று யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் டெஸ் இங்க்ராம் கூறினார்.
மற்ற இடங்களிலும் நிலைமை பெரிய அளவில் வேறுபட்டதல்ல என்பதை உணர்ந்த போதிலும்
உணவு மற்றும் சுத்தமான தண்ணீருக்கு ஏற்பட்ட கடுமையான பற்றாக்குறை மற்றும் தொடர்ச்சியான குண்டுவெடிப்புக்கு மத்தியில் காஸா நகரில் வசிக்கும் பலர் தெற்கு நோக்கிச் செல்வது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
காஸாவில் பாதுகாப்பான இடம் இல்லை என்றும் டெஸ் இங்க்ராம் வலியுறுத்தினார். காசாவில் நிலவும் குழப்பம் குறித்து சுகாதார அதிகாரிகள், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பல மாதங்களாக எச்சரித்து வருவதாகவும் ஆனால், எதுவும் மாறவில்லை என்றும் அவர் கூறினார்.
மத்திய காஸாவிலும் பஞ்சம் பரவும் அபாயம் - யுனிசெஃப் எச்சரிக்கை
8 செப்டெம்பர் 2025, 3:48 AM