கூச்சிங், செப்டம்பர் 6- இந்தோனேசியாவில் அண்மையில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை படிப்பினையாகக் கொள்ள அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
நாட்டில் நல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் நிலைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
நமது அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். மக்களின் கோபத்தைத் தூண்டுவதற்காக (சில தரப்பினரால்) பல்வேறு கதைகள் கட்டப்பட்டுகின்றன. மக்கள் கோபம் கொள்ளும்போது எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அமைதிப் போராட்டங்கள் பாதுகாப்பு அற்றதாகி விடுகின்றன.
நாட்டை சிறப்பாக நிர்வகிக்க நிலைத்தன்மையும் பாதுகாப்பும் முக்கியம். நமது பொருளாதாரம் நன்றாக இருந்தால் முதலீட்டாளர்கள் வந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவார்கள். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற 'கெம்பாரா செகுலாய் செஜலாய் பெலியா சரவாக் 2025' நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று மலேசியாவும் ஆசியான் உறுப்பு நாடுகளும் நம்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு கூறியிருந்தார்