பேங்காக், செப் 6- நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பூம்ஜைதாய் கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் கூட்டணியின் ஆதரவுடன் 58 வயதான அந்த மூத்த அரசியல்வாதி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்தம் 490 உறுப்பினர்களில் 311 பேர் அனுடினுக்கு ஆதரவாக வாக்களித்தனர். பியூ தாய் கட்சி வேட்பாளர் சாய்காசெம் நிதிசிரியைக்கு 152 வாக்குகள் கிடைத்த வேளையில் 27 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை .
பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 247 வாக்குகள் என்ற வரம்பை அனுட்டின் எளிதாகக் கடந்துவிட்டதால் இந்த முடிவு அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு ஒரு மணி நேரத்திற்குள் நிறைவடைந்தது.
அரச ஒப்புதலைப் பெறுவதற்காக அனுடினின் பெயரை நாடாளுமன்ற சபாநாயகர் வான் முகமது நூர் மாதா
மன்னர் மகா வஜிரலோங்கோர்னிடம் சமர்ப்பிப்பார்.
முன்னாள் துணைப் பிரதமரும் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சருமான அனுடின், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தாய்லாந்தின் முயற்சிகளில் முக்கிய நபராக விளங்கினார்.
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் நியமனம்
6 செப்டெம்பர் 2025, 11:42 AM