கோத்தா பாரு, செப். 6- சந்தையில் நன்கு விலைபோகாத உள்ளூர் அரிசி குறித்து விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
உள்ளூர் அரிசியின் விலை இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலையைக் காட்டிலும் அதிகம் வேறுபட்டதல்ல என்பதே இங்குள்ள பிரச்சினை என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
அரிசியில் சிக்கல் உள்ளது. அது என்னவென்றால்
அரிசி மிகவும் மலிவாக இருப்பதும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியுடன் நிலவும் போட்டியும் ஆகும். எனவே, இந்த அரிசி குறித்து தற்போது ஆழமான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம் என அவர் சொன்னார்.
உள்ளூர் அரிசியின் விலை 10 கிலோகிராமுக்கு 26.00 வெள்ளிக்கும் குறைவாகவே உள்ளது... உள்ளூர் அரிசி விலையிலிருந்து அதிக வேறுபாடு இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட அரிசி காரணமாக உள்ளூர் அரிசி மீண்டும் கைவிடப்படத் தொடங்கியுள்ளது.
எனவே உள்ளூர் அரிசியை வாங்க இப்போதே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
இன்று இக்குள்ள கம்போங் பந்தாய் மெக் மாஸில் நடைபெற்ற நடமாடும் வங்கி திறப்பு மற்றும் மடாணி கிராம தத்தெடுப்பு தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் நிலையில் வெள்ளை அரிசியின் உள்ளூர் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு 2.60 வெள்ளியாக இருப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சிறப்பு மானிய விலை உள்ளூர் வெள்ளை அரிசி திட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மக்கள் நியாயமான விலையில் அரிசியை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது