ஷா ஆலம், செப். 5- சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் இன்றிரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திரெங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிர கனமழைக்கான அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்,
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளத்தை வலம் வரலாம். மேலும் அத்துறையின் சமூக ஊடகங்களையும் பின்தொடரலாம். அண்மைய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சபாக் பெர்ணம், கோல சிலாங்கூரில் இரவு 7.00 வரை கன மழை
5 செப்டெம்பர் 2025, 9:26 AM