ஷா ஆலம், செப். 5- இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி, டூரிசம் சிலாங்கூர் மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் மூன்று ஊழியர்களுடன் நேற்று யின் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்தார்.
மலேசியாவின் மிக உயரமான சிகரத்திலிருந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டதற்காக அவர்களின் இந்தப் பயணம் மலேசியா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததாக சிலாங்கூர் அரசு தலைமைச் செயலகத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய இந்த சவால்மிக்கப் பயணம் திம்போஹோன் கேட் பகுதியில் தொடங்கி, 1.5 கிலோமீட்டர் உயரமுள்ள உச்சியை தொடுவதற்கு முன்னர் லாபன் ரத்தாவை அடைய சுமார் ஆறு மணி நேரம் பிடித்தது.
மலையேறும் குழுவினர் 2.5 கிலோ மீட்டர் பாதையில் இறங்கி மீதமுள்ள 6 கிலோ மீட்டர் தூரத்தை மறுநாள் (நாளை) காலை 8 00 மணிக்குத் தொடந்தார்கள். வாழ்த்துக்கள், சிறப்பாகச் செய்தீர்கள் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
அக்குழுவினர் மலையுச்சியில் உறுதிமொழியை வாசித்ததோடு மட்டுமல்லாமல் 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் ஆண்டு கொடியையும் ஏற்றினர்.
கினாபாலு மலையின் சிகரம் தொட்டு நஜ்வான், மாநில அரசுபணியாளர்கள் சாதனை
5 செப்டெம்பர் 2025, 5:18 AM