ஜோகூர் பாரு, செப் 4: நேற்று மாலை 6.39 மணிக்கு ஸ்ரீ மேடன், பாரிட் சுலோங், பத்து பஹாட்டில், ரிக்டர் அளவு 2.9ஆக பதிவான பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.
மைகெம்பா வலைத்தளத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதி 1.95 டிகிரி வடக்கு மற்றும் 102.99 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்தது.
இருப்பினும், இதுவரை சேதம் அல்லது வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் பெறப்படவில்லை.
செகாமட்டில் பல தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 6.13 மணிக்கு 4.1 அளவுடன் முதல் சம்பவம் தொடங்கியது. புதன்கிழமை காலை 8.59 மணி (3.2); வியாழக்கிழமை மாலை 7.56 மணி (2.5); வெள்ளிக்கிழமை அதிகாலை 4.24 மணி (3.4); சனிக்கிழமை காலை 7.29 மணிக்கு (2.7) நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆகஸ்ட் 31 அன்று, 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.