கோலாலம்பூர், செப் 4 - குடும்ப வன்முறை உள்ளிட்ட துன்புறுத்தல் சம்பவங்களுக்கு ஆண்களும் உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர் என்பதை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இதில் உடல், உணர்வு மற்றும் பாலியல் சித்ரவதை ஆகியவை அதிகரித்து வந்தாலும் அது சார்ந்த புகார்கள் குறைவாகவே பதிவாகுவதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைச்சு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
வன்முறை தொடர்பான வழக்குகளைப் பொறுத்தவரை, இது பெண்களை மையமாகக் கொண்டது மட்டுமல்லாமல், ஆண்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கொண்ட புகார்களையும் உள்ளடக்கிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாலின வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் விதமாக 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் சமூக நலத்துறை விசாரணை நடத்தும்.