கோலாலம்பூர், செப் 4: நேற்று மாலை செராஸ், தாமான் மெகாவில் நாய் தாக்கியதில் சிறுவன் ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் மாலை 6.30 மணியளவில், ஐந்து வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்த சமயத்தில் நடந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு முன்பு, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கீழ் அந்த குறிப்பிட்ட நாய் காணப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த முகமட் ஃபிர்தௌஸ் முகமட் இசா கூறினார்.
"சைக்கிளில் சென்ற அச்சிறுவன் காரை நெருங்கியபோது, நாய் திடீரென தாக்கியது," என்று அவர் நேற்று இரவு பெர்னாமாவிடம் கூறினார்.
பின்னர் அச்சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காகக் காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் முகமட் ஃபிர்தௌஸ் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், நாய் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட ஒரு குழந்தையைக் காட்டும் 10 வினாடி வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


