கோலாலம்பூர், செப் 3 - இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது கலவரங்களிலோ இதுவரை எந்த மலேசிய மாணவர்களும் ஈடுபடவில்லை.
இந்தோனேசியாவில் உள்ள மலேசிய கல்வி அலுவலகம் வழி, தமது தரப்பு தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக உயர்க் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார். மேலும், மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விஸ்மா புத்ராவுக்கு நெருக்கமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை அனைத்துலக மற்றும் ஆசியான் ஆய்வு கழகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், டாக்டர் சம்ரி செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
மலேசிய கல்வி அலுவலகமும் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அண்மைய தகவல்களை வழங்கி, கலவரங்கள் ஏற்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தி வருவதாக அவர் விவரித்தார்.
ஜகார்த்தாவில் மட்டுமில்லாமல், சுமத்ரா, ஜாவா தீவு மற்றும் பிற பகுதிகளிலும் மலேசிய மாணவர்கள் உள்ளதாக டாக்டர் சம்ரி குறிப்பிட்டார்.
பெர்னாமா