புத்ராஜெயா, செப் 2 - 'Autism' எனப்படும் மதி இறுக்கம் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பராமரிப்பு மையத்தை 2027ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க, புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு இலக்குக் கொண்டுள்ளது. என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
மலாக்காவில் 3 பராமரிப்பு மையங்களை அமைக்க, இந்த ஆண்டு தொடங்கியுள்ளோம். ஒரு மாநிலத்தில், ஒரு பராமரிப்பு மையத்தை உருவாக்குவோம். 2027-ஆம் ஆண்டில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு மதி இறுக்கம் பிள்ளைகளுக்கான பராமரிப்பு மையத்தை உருவாக்குவோம்," என்றார் அவர்.
அதன் தொடர்பில், அத்துறையைச் சேர்ந்தவர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நடத்தப்படவிருக்கும் 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடலிலும், அமைச்சு முக்கிய கவனம் செலுத்தும் அம்சங்களில் ஒன்றாகும் என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
அதே வேளையில், KEMAS Pra Tahfiz பராமரிப்பு மையத் திட்டம் விரிவுபடுத்தப்படவிருப்பதோடு, அடுத்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 140,000 ஆக அதிகரிக்கவும் இலக்கு கொண்டுள்ளது என்றார்.
பெர்னாமா


