கோம்பாக், செப். 1- பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் இன்று நடைபெற்ற 100 எஹ்சான் ரஹ்மா விற்பனை விழாவில் (ஜே.இ.ஆர்.) கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் 100 வெள்ளி அடிப்படை ரஹ்மா உதவித் தொகையை (சாரா) பொருள்கள் வாங்குவதற்கு பயன்படுத்திக் கொண்டனர்.
வாழ்க்கைச் செலவின சுமையைக் குறைக்க உதவுவதில் மாநில அரசுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு உண்மையிலேயே மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதை இந்த அபரிமித ஆதரவு நிரூபித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் வேளாண் மேம்பாட்டுக் கழகம் (பி.கே பி.எஸ்.) உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்த ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டத்தின் மூலம் இந்த முன்னெடுப்பின் செயல்திறனை தெளிவாகக் காணப்படுகிறது.
தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மலிவு விற்பனைத் திட்டம் மக்களுக்கு நேர்மறையான மற்றும் நிலையான பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் மாநில அரசின் திறனை நிரூபித்துள்ளது என்று அவர் இந்த விற்பனை விழாவில் உரையாற்றும்போது கூறினார்.
நிகழ்ச்சி முழுவதும் போதுமான அடிப்படைப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் நிலையில் இதில் 4,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
பத்து கேவ்ஸில் ரஹ்மா விற்பனை விழா- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 செப்டெம்பர் 2025, 8:52 AM




