பிந்துலு, செப். 1- இங்குள்ள ஜாலான் செலஸ்டின் உஜாங், ஸ்பைட் போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நேற்று சிறுவன் ஒருவன் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
பிந்துலுவில் உள்ள தாமான் ஶ்ரீ பெலாபுஹான் நுழைவுச் சாலை சந்திப்புக்கு அருகில் தனது ஏழு வயது மகன் காணாமல் போனதாக அவரின தந்தையிடமிருந்து தமது துறைக்கு நேற்றிரவு 8.30 மணியளவில்
அழைப்பு வந்ததாக பிந்துலு மாவட்ட காவல்துறைத் தலைவர் நிக்சன் ஜோசுவா அலி கூறினார்.
அத்தகவலின் அடிப்படையில் அச்சிறுவனை தேடும் பணியில் உதவுவதற்காக பிந்துலு மாவட்ட போலீஸ் ரோந்துப் பிரிவு மற்றும் பிந்துலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
இபான் இனத்தைச் சேர்ந்த அந்த ஏழு வயது சிறுவனின் உடல் அந்த ஆடவரின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஐந்து மீட்டர் ஆழ நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் எந்த குற்றச் செயல்களுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது ஆரம்ப பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
அச்சிறுவனா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை பிந்துலு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிந்துலு மருத்துவமனை தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்பு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் விழுந்தச் சிறுவன் சடலமாக மீட்பு- பிந்துலுவில் சம்பவம்
1 செப்டெம்பர் 2025, 8:55 AM


