ஈப்போ, செப். 1- நேற்று இங்கு நடைபெற்ற மாநில அளவிலான தேசிய தின அணிவகுப்பின் போது பிரதான மேடையில் இருந்த பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவை தாக்க முயன்ற பெண்மணி இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
41 வயதுடைய பெண்ணை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் வர்தா நபிலா முகமது அப்துல் வஹாப் பிறப்பித்துள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325/511 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மனநல சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் அப்பெண் பிரதான மேடையில் ஏறி பேராக் ஆட்சியாளரைத் தாக்க முயன்றதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியாளர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பேராக் மாநில கீதம் இசைக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.


