கோலாலம்பூர், ஆக. 30- நிச்சயமற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் அரசாங்கம் எடுத்த மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை காரணமாக 2025 இரண்டாவது காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 4.4 சதவீதமாக உயர்கண்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர், அடக்குமுறை வரிகளை எதிர்கொள்வதில் ஆசியான் நாடுகளைப் போலவே மையமயமாக்கல் அணுகுமுறையை அரசாங்கம் எடுத்து வருகிறது அவர் கூறினார்.
(நாங்கள்) சீனாவுடன் நல்ல உறவில் இருக்கிறோம். அமெரிக்காவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நாளை, சுதந்திர தின அணிவகுப்புக்குப் பிறகு அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் நான் சீனாவுக்குச் செல்வேன்.
அதுதான் மலேசியாவின் திறமைக்கு அடையாளமாகும் என்று மலேசிய வேளாண் கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) இன்று இங்கு 2025 தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் கூறினார்.
நாட்டின் நலன்களையும் சில நாடுகள் தங்கள் மக்களை பாதுகாக்க முற்படுவதால் மலேசியா உடன்படாத விஷயங்களும் உள்ளன என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
நாங்கள் உடன்படாத சில விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த நாட்டின் தலைமைத்துவத்தில் உள்ள எங்கள் நண்பர்களின் திறமை அதுதான். ஏனென்றால் அவர்கள் நாட்டின் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தேர்வு செய்கிறார்கள். தீவிர மக்களின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொண்டால் அங்கு போர், இங்கே போர்... மக்கள் பிளவுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
பாலஸ்தீனத்தில் காஸா விவகாரம் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து மலேசியா உறுதியான அணுகுமுறையை எடுத்து வருவதாகவும் அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் வகையில் நட்பைப் பேணி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனால்தான் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாங்கள் இன்னும் 4.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். அந்த எண்ணிக்கை பாராட்டத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.


