
செர்டாங் ஆக, 30 ;- தேசிய தினத்தை முன்னிட்டு
இன்று நடைபெறற பிரதமரின் சிறப்புரை நிகழ்வு
நாட்டுப்பற்று உணர்வை ஊட்டுவதற்கும் நாட்டின் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உறுதியை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருந்தது
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை 11.00 மணிக்கு செர்டாங்கில் உள்ள மலேசியா வேளாண் கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) சிறப்புரை வழங்கினார்.
இன்றைய மடாணி ஒற்றுமை அரசாங்கம் நாட்டு மக்களின் வளர்ச்சி , நல்வாழ்வு, அமைதி மற்றும் ஒற்றுமைக்கும், பொறுப்பான செலவுகளுக்கும், கடுமையான உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
அதன் பயன் நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். அதை உள்நாட்டு தரவுகள் மட்டுமின்றி சர்வதேச தரவுகளும் நிரூபிக்கின்றன. நாட்டில் மட்டுமல்ல உலக பொருளாதார நிறுவனங்களின் பாரட்டுகளை பெற்று வருவது, மட்டுமின்றி மேலும் சான்றாக மீட்சி பெறும் ரிங்கிட், நாட்டு மக்களுக்கு இவ்வாண்டு வழங்கப்படும் 1500 கோடி உதவி தொகையும் விளங்குகிறது என்றார்.
நாட்டில் விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் . இப்பொழுது ஏதாவது ஒரு பொருள் 5 காசுகள் விலை உயர்ந்தாலும் அதற்கு அரசாங்கத்தை கொடுமையானது என வர்ணிக்கும் பிரிவினர். அவர்கள் இந்த நாட்டை நிர்வகித்த காலத்தில் விலைகள் எகிரியது மட்டுமல்லாமல் நாட்டில் பொருட்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை கூட மறந்து விட்டனர்.
ஆனால் மக்கள் இன்றைய அரசின் வெற்றிகளை விலைவாசி முதல் , ஊதிய உயர்வு வரை தட்டுப்பாடு இன்றி பொருட்கள் கிடைப்பது போன்றவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நாட்டின் மேம்பட்ட நிலைக்கு ஆதாரம் என்றார்.
இந்த பொன்னான வேளையில் 68வது நாட்டு மெர்டேக்கவை கொண்டாடும் வேளையில் நாட்டின் வெற்றிகளை, கொண்டாடுவோம், நாட்டு மக்களின் வளர்ச்சி , நல்வாழ்வு, அமைதி மற்றும் ஒற்றுமையும் நாட்டின் மக்களின் முன்னேற்றத்தை தொடர்ந்து முன்னெடுக்க அவசியமானது என பிரதமர் வலியுறுத்தினார்.



