பிரதமர் நாட்டு மக்களுக்கு முக்கிய உரை

30 ஆகஸ்ட் 2025, 2:37 AM
பிரதமர் நாட்டு மக்களுக்கு முக்கிய உரை
பிரதமர் நாட்டு மக்களுக்கு முக்கிய உரை

கோலாலம்பூர், ஆக. 30- தேசிய தினத்தை முன்னிட்டு
இன்று நடைபெறும்
பிரதமரின் சிறப்புரை  நிகழ்வு
நாட்டுப்பற்று  உணர்வை ஊட்டுவதற்கும் நாட்டின் மிகவும் ஒளிமயமான  எதிர்காலத்திற்கான உறுதியை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருக்கும்.

பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலை 11.00 மணிக்கு செர்டாங்கில் உள்ள மலேசியா வேளாண் கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) சிறப்புரை  வழங்க உள்ளார்.

அந்தச் செய்தி வெறும் உரை மட்டுமல்ல. மாறாக,  கடந்த காலப் போராட்டங்களை நினைவுகூரும் ஒரு தளமாகவும் விளங்கும்  என்று  நேற்று முகநூலில் வெளியிட்டப் பதிவில் அவர்  தெரிவித்தார்.

தேசிய தினத்திற்கு முந்தைய நாள் நடைபெறும் இந்த நிகழ்வில் அரசு ஊழியர்கள், சீருடைப் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உட்பட 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

மாணவர் தன்னார்வ அறக்கட்டளையின்  தன்னார்வலர்கள் மற்றும் தபிகா பெர்பாடுவான் மாணவர்களால் ருக்குன் நெகாரா உறுதிமொழியை வாசித்தல், ஹார்மோனி மடாணியின் நிகழ்ச்சி மற்றும் "தங்கால் 31" பாடலைப் பாடுதல் ஆகியவை நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களில் அடங்கும்.

இந்த நிகழ்வு RTM, Media Prima, Astro Awani, Bernama TV, TVS, TV AlHijrah உள்ளிட்ட அனைத்து முக்கிய ஒளிபரப்பு நிலையங்கள், Facebook Live போன்ற சமூக ஊடக தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

"மலேசியா மடாணி: நல்லிணக்கத்தில் மக்கள்" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு தேசிய தின கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு டத்தாரான் புத்ராஜெயாவில் தொடங்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.