ஷா ஆலம், ஆகஸ்ட் 29: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இன்று மாலை 6.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், பேராக், பினாங்கு, லாபுவான் மற்றும் கெடா, கிளந்தான், பகாங், திரெங்கானு, சரவாக் மற்றும் சபாவின் பல பகுதிகளிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக தீவிரத்தன்மையுடன் கூடிய கனமழைக்கான அறிகுறிகள்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் என எதிர்பார்க்கப்படும் போது இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்படும் என வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டது.
இந்த எச்சரிக்கை ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இது வெளியிடப்படும் போது அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.
பொதுமக்கள் www.met.gov.my என்ற வானிலை ஆய்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பெறலாம். ளேலும் வானிலை தொடர்பான சமீபத்திய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.






