கோஸ்டாரிகா, ஆகஸ்ட் 28 - கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகுரோ தேசிய பூங்காவிற்கு அருகே மீன்பிடி பயணத்தின் போது அற்புதமான பிரகாசமான ஆரஞ்சு சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று உலகில் இதுவரை கண்டு அறியப்பட்டு ஒரே சுறா இதுவாகும்.
இதன் அசாதாரண நிறம் சாந்திசம் எனப்படும் நிலையால் ஏற்படுகிறது, இது சுறாக்கள் போன்ற மீன்களில் மிகவும் அரிதாக ஏற்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடல் உயிரியல் இதழில் இந்த படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.
சாந்திசம் என்பது தோலில் உள்ள நிறத்தில் ஏற்படுகிறது. இது அனைத்து விலங்குகளிடத்தில் ஏற்பட வாய்புணண்டு. இந்நிலை அவற்றின் தோலுக்கு ஒரு குறிப்பிட்ட நிறத்தை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.


