கெப்பாள பத்தாஸ், ஆகஸ்ட் 28: இன்று அதிகாலை, லஹார் தபுத் பெனாகா அருகே மஸ்ஜித் ஜமெக் நூருசாடா அருகே விழுந்திருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் இறக்கும் தருவாயிலிருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாலை 4.55 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் கோலா மூடா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) பணியாளர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
“சம்பவ இடத்தில் ஒரு மரம் விழுந்திருந்தது. அம்மரத்தை 43 வயதான யமஹா லஜெண்டா மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மோதியதை கண்டறிந்தனர்.
“பாதிக்கப்பட்டவரை மீட்கும் முன், பணியாளர்கள் அம்மரத்தை வெட்டி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சகத்தின் (KKM) ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் மீட்பு நடவடிக்கை காலை 7.24 மணிக்கு முடிவடைந்ததாகவும் ஜான் கூறினார்.
- பெர்னாமா


