ஸ்ரீ கெம்பாங்கான், ஆக. 26 - இங்குள்ள பால் பண்ணைக்கு (ஃபார்ம் ஃபிரஷ்) ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்கள் மேற்கண்ட சுற்றுப் பயணத்தில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வெய் இணைந்து அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கினார்.
தலைநகர், பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தைச் சேர்ந்த முதலாம், இரண்டாம் படிவ மாணவர்கள் 80 பேர் இச்சுற்றுலாவில் பங்கேற்றனர்.
இயற்கை காட்சிகள் நிறைந்து பசுமையுடன் காட்சியளிக்கும் இந்தப் பால் பண்ணைக்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர். ஸ்ரீ முருகன் நிலையத்தினருடன் வேய்ன் ஓங் சுன் பங்கேற்ற மூன்றாவது நிகழ்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலைய மாணவர்களுடன் இணைந்து இந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்வதில் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக வேய்ன் குறிப்பிட்டார்.
இச்சுற்றுலாவில் சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்கள் கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
வருங்காலங்களில் ஸ்ரீ முருகன் நிலையத்துடன் மேலும் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவதாகவும் அவர் சொன்னார் .
இச்சுற்றுலாவில் ஸ்ரீ முருகன் நிலையம் சார்பில் அதன் இணை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ராவ், பிரிக்பீல்ட்ஸ் எஸ்எம்சி ஒருங்கிணைப்பாளர் அசோக், முதலாம் படிவ பொறுப்பாளர் சசிதரன், இரண்டாம் படிவ பொறுப்பாளர் கர்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
யுபிஎம் பால் பண்ணை சுற்றுலா - ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்களுடன் வேய்ன் ஓங் பங்கேற்பு
26 ஆகஸ்ட் 2025, 8:57 AM



