கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 — ‘ரேபிட் கேஎல் டென்யூட் நாடி மெர்டேகா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தேசிய மாதத்தை முன்னிட்டு குறைந்த விலையில் மைடூரிஸ்ட் பாஸிற்கான விளம்பரச் சலுகையை ரேபிட் கேஎல் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22 முதல், மலேசிய குடிமக்களுக்கு ஒரு நாளைக்கு RM15, இரண்டு நாட்களுக்கு RM20 மற்றும் மூன்று நாட்களுக்கு RM25 போன்ற குறைந்த கட்டணத்தில் இந்த பாஸ் வழங்கப்படுகிறது என்று ரேபிட் கேஎல் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது.
குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, மைடூரிஸ்ட் பாஸ் ஒரு நாளைக்கு RM35, இரண்டு நாட்களுக்கு RM50 மற்றும் மூன்று நாட்களுக்கு RM65 என வழங்கப்படுகிறது.
ரயில்கள், பஸ் ரேபிட் டிரான்சிட் (BRT) சன்வே லைன், ரேபிட் கேஎல் பேருந்துகள், MRT ஃபீடர் பேருந்துகள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவைகள் உட்பட அனைத்து ரேபிட் கேஎல் சேவைகளிலும் இந்த பாஸ் வரம்பற்ற பயணத்தை வழங்குகிறது.
"வரம்பற்ற பயணத்திற்கு கூடுதலாக, MyTourist பாஸ் வைத்திருப்பவர்கள் 40க்கும் மேற்பட்ட மூலோபாய கூட்டாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு கூடுதல் சலுகைகளைப் பெறுவார்கள். இதில் சுற்றுலா தலங்கள், ஷோப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் தள்ளுபடிகள் அடங்கும். மொத்த சேமிப்பு RM800 வரை இருக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பொதுமக்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் எளிதான முறையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது தேசபக்தி உணர்வை வளர்க்க வாய்ப்பளிக்கிறது என ரேபிட் கேஎல் தெரிவித்தது. அதே நேரத்தில் மைடூரிஸ்ட் பாஸ் கூட்டாளர்களிடமிருந்து சிறந்த சேமிப்பு மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.
மைடூரிஸ்ட் பாஸை ரேபிட் கேஎல் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களில், மைரேபிட் பல்ஸ் செயலி மூலம் அல்லது இணையம் மூலம் மைரேபிட் தளத்தில் வாங்கலாம்.


