ஷா ஆலம், ஆகஸ்ட் 25: நேற்றிரவு 9 மணியளவில் வீசிய புயல் காரணமாக, கிள்ளான், மேருவில் பெர்சியாரன் ஹம்சா ஆலங்கில் உள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்தின் முன் ஒரு மரம் விழுந்தது.
இச்சம்பவம் தொடர்பாக இரவு 9.21 மணியளவில் தனது துறைக்கு அழைப்பு வந்தவுடன் காப்பார் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) செயல்பாட்டுத் தலைவர் தெரிவித்தார்.
"அந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மரக்கிளைகளை வெட்டி மரத்தை அகற்றினர்" என்று சஹாருடின் முக்கமட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முன்னதாக, அதிகாலை 2 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் இதனால் பல பகுதிகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.
அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்தது.


