கோத்தா பாரு, ஆக. 26 - பாசீர் மாஸில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் படிவ மாணவனை துன்புறுத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நான்காம் படிவ மாணவர்கள் அறுவர் நேற்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களின் தடுப்புக் காவல் அனுமதி காலம் முடிந்ததைத் தொடர்ந்து அரசுத் தரப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கும் நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி காமா அசுரல் முகமது
தெரிவித்தார்.
ஆறு சந்தேக நபர்களின் தடுப்புக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர்கள் முன்னதாக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் பகடிவதை புரிந்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 507பி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
மூன்றாம் படிவ மாணவர் தாக்கப்பட்டு, கால்சட்டை கீழே இறக்கப்பட்டு, கம்பியால் கீறப்பட்டு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைதா தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட ஆறு மாணவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பகடிவதை - ஆறு மாணவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு
26 ஆகஸ்ட் 2025, 1:59 AM