ஜோகூர் பாரு, ஆக 25 - இங்குள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் நிர்வாகி இல்லாத பகுதிநேர வேலை நேர வேலை வாய்ப்புத் திட்ட மோசடியில் சிக்கி 91,167 வெள்ளியை இழந்தார்.
பாதிக்கப்பட்ட நபரான முப்பத்தெட்டு வயதான உள்நாட்டு ஆடவர் "டிண்டர்" என்ற சமூக ஊடகம் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகத்தைப் பெற்றதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் கூறினார்.
பின்னர் Inventoresources.site என்ற வலைத்தளம் மூலம் பகுதிநேர வேலை வாய்ப்பை அந்ந ஆடவருக்கு வழங்க அப்பெண் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்பெண் பாதிக்கப்பட்ட நபரை நம்ப வைத்து கடந்த ஜூலை 25 முதல் 29 வரை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் உள்ள பல வங்கிக் கணக்குகளுக்கு ஒன்பது பணப் பரிமாற்றங்களைச் செய்ய வைத்து ஏமாற்றியது முதற்கட்ட விசாரணைகள் மூலம்கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் செலுத்தப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவரின் கணக்கு முடக்கப்பட்டதோடு அதன் பிறகு சந்தேக நபர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் நேற்று போலீசில் புகார் அளித்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த மோசடி புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளைச் சரிபார்ப்பது உள்ளிட்ட விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்