மச்சாங், ஆக. 24- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை அமல்படுத்தப்பட்ட 150 வெள்ளி நிலையான அபராதத் தொகை முன்னெடுப்பின் விளைவாக சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.) நிலுவையில் உள்ள 10 கோடியே 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான அபராதத் தொகையை வெற்றிகரமாக வசூலித்துள்ளது.
தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (AwAS) சம்மன்கள் [53A], விசாரணை அழைப்பு அறிவிப்பு (114) மற்றும் ஒட்டுதல் சம்மன்கள் அறிவிப்பு/JPJ(P)23 (115) ஆகிய மூன்று வகையான குற்றங்களை இது உள்ளடக்கியுள்ளதாக ஜே.பி.ஜே. துணை தலைமை இயக்குநர் (திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள்) டத்தோ ஜஸ்மானி ஷஃபாவி கூறினார்.
நிலுவையிலுள்ள வெ.10.1 கோடி அபராதத் தொகையை ஜே.பி.ஜே. வசூலித்தது
24 ஆகஸ்ட் 2025, 12:03 PM


