பெட்டாலிங் ஜெயா, ஆக. 24- மலையேறும் நடவடிக்கையின் போது சுற்றுப் புறங்களின் தூய்மையை உறுதி செய்யும்படி மலையேறிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எவரெஸ்ட் மலையின் உச்சியை முதலில் அடைந்த மலேசியர்களில் ஒருவரான டத்தோ எம். மகேந்திரன் ஆலோனை கூறியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளின் வழி டத்தோ எம். மகேந்திரன்லைப் பாதுகாக்கும் அதேவேளையில் எதிர்காலத் தலைமுறையினருக்கு மாசு இல்லா சூழலை உருவாக்கவும் இயலும் என்று அவர் சொன்னார்.
மலையேறுதல் போன்ற நடவடிக்கைகள் மலேசியர்களின் இன்றைய வாழ்க்கை முறைகளில் ஒன்றாக மாறி விட்டது. ஆனால், எங்கள் காலத்தில் மலையேறுவதை சமூகம் விநோதமாக பார்த்ததோடு எந்த பயனும் தராத செயல் எனக் கருதியது என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கடந்த 1997ஆம் ஆண்டு மலேசியா அடைந்த வெற்றிக்குப் பின்னர் மலையேறுவோர் சங்கங்கள் அதிகளவில் தோன்றியதோடு இப்போது பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதன் நடவடிக்கைகள் தீவிரமடைந்து விட்டன என்றா அவர்.
நாட்டின் பிரபல ஊடகவியலாளர் டான்ஸ்ரீ ஜோஹான் ஜாபர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற மலையேறிகள் சமூக கலந்துரையாடல் மற்றும் எக்ஸபிடிசி டிரான் தித்திவங்சா வி6 பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போது மகேந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இந்த துறை பிரபலமடைந்து வரும் நடப்புச் சூழலில் மலையேறும் பகுதிகள் மாசுபாடுகளிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்ய மலையேறிகளுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தித் தருவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்நிகழ்வில் பேசிய பகாங் மாநில வன இலாகாவின் துணை இயக்குநர் முகமது யுசைனி முகமது யூசுப் மலேசியாவில் தற்போது வன இலாகாவில் பதிவு பெற்ற 240 மலையேறும் தடங்கள் உள்ளதாக கூறினார்.


