புது டில்லி, ஆக. 24- கிழக்கு இந்தியாவில் உள்ள கோல்கத்தா விமான நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மோப்ப நாய் கடித்த தில் நான்கு வயதுச் சிறுவன் காயமடைந்தான். இச்சம்பவத்தினால் ஓய்வுக்காக மலேசியா பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அச்சிறுவனின் குடும்பத்தினர் ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த நாய்க் கடி சம்பவம் காரணமாக அச்சிறுவன் சில வாரங்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு சிகிச்சையை சில வாரங்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுங்கத் துறையின் சோதனை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட அந்த நாயை கையாள்வதில் போதுமான திறமையின்றி செயல்பட்டது தொடர்பில் அதனை தனது பாதுகாப்பில் வைத்திருந்த நபருக்கு எதிராக அச்சிறுவனின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் இச்சம்பவத்திற்கு பிறகு பணியை பாதியில் விட்டு விட்டு நாயுடன் தப்பியோடி விட்டதாகவும் இதனால் தங்கள் குடும்பத்தினர் பயணத்தை தொடர முடியாமல் சிக்கிக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


