சுபாங் ஜெயா கழிவுநீர் குழாய் RM 2.74 m க்கு மாற்றப்பட்டது

22 ஆகஸ்ட் 2025, 9:37 AM
சுபாங் ஜெயா கழிவுநீர் குழாய் RM 2.74 m க்கு மாற்றப்பட்டது
சுபாங் ஜெயா கழிவுநீர் குழாய் RM 2.74 m க்கு மாற்றப்பட்டது

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 22 - இங்குள்ள ஜாலான் எஸ் எஸ் 15/4 மற்றும் எஸ்எஸ் 15/8 இல் உள்ள கழிவுநீர் குழாய் RM 2.74 மில்லியன் ஒதுக்கீட்டில் மாற்றப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களிடம் இருந்து கழிவுநீர் அடைப்பு குறித்து அடிக்கடி புகார்கள் வந்ததை தொடர்ந்து குழாய் மாற்றப்பட்டதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் கூறினார்.

"2023 முதல், 30 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான குழாய் குறித்து 88 புகார்களைப் பெற்றுள்ளோம், இது அடைப்பால் அடிக்கடி சேதமடைகிறது, இதனால் கழிவுநீர் இணைக்கப்பட்ட வளாகங்களுக்குள் மீண்டும் பாய்கிறது. "என்றார். 
தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) கழிவுநீர் நிதி பங்களிப்பு மூலதனத்துடன், மேம்படுத்தப்பட்ட இத்திட்டம், முன்பு எதிர்பார்க்கப்பட்ட 12 மாதங்களுடன் ஒப்பிடும்போது 18 மாதங்களில் குழாய் மாற்றும் பணி முடிக்கப்பட்டது.

"கழிவுநீர் குழாய்க்கு பதிலாக 400 மீட்டரில் 225 மிமீ விட்ரிஃபைட் களிமண் குழாய் மாற்றப்பட்டது, இதில் 46 கடைத் தொகுதிகள் அடங்கும்" என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.மண் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அணி சவால்களை எதிர்கொண்ட தால் தாமதங்கள் ஏற்பட்டதாக மிஷல் இங் கூறினார்.

"கட்டப்பட்ட கட்டமைப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், கட்டிடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் கட்டுமானம் முன்னேறுவது உறுதி செய்வதற்கும் மண் கட்டுப்பாடு அவசியம். "என்றார். ஸ்பான் மற்றும் இண்டா வாட்டர் கன்சோர்ட்டியத்தால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 40,000 குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும் "என்று மிஷல் இங் கூறினார்.

இதற்கிடையில், ஸ்பான் பிராந்திய செயல்பாட்டு பிரிவின் மூத்த இயக்குனர் முகமது ஜலாலுதீன் சுலைமான், அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களை சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும், தடைசெய்யப்பட்ட கழிவுகளை கொட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

"இந்த கழிவுநீர் குழாய் ஒரு பொது சொத்து, வளாக உரிமையாளர்கள் (சட்டப்படி)சட்டத்தை கடைபிடிக்கா விட்டால் அது ஒரு குற்றமாகும். குழாய் அமைப்புகள் அவற்றின் தீர்மானிக்கப்பட்ட ஆயுட் காலத்திற்கு ஏற்ப நீடிப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றார்.

"தவறான செய்கைகளுக்கு வர்த்தகர்கள் மீது நீர் சேவைகள் தொழில் சட்டம் 2006 இன் பிரிவு 61 இன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப் படலாம்" என்று ஜலாலுதீன் கூறினார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.