பினாங்கு, ஆகஸ்ட் 22 - ஜோர்ஜ்டவுன், ஆயார் ஈத்தாம் பகுதியிலுள்ள ஜாலான் பாயா தெருபோங்கில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவினால் அப்பகுதி மக்கள் பெரும் பதட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் 10 மீட்டர் வரை மதிப்பிடப்பட்ட பரப்பளவு கொண்ட நிலச்சரிவு நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த மூன்று வீடுகள் இச்சம்பவத்தில் பாதிப்படைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்தவுடனேயே இயந்திரங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தளபதி முகமது சயாஃபிசானி முகமது ரோஸ்லி கூறியுள்ளார்.
தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொதுப்பணித் துறை (JKR) மற்றும் மலேசிய காவல்துறை (PDRM) ஆகியோரும் மீட்பு பணி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. கண்காணிப்பு மற்றும் மேல் நடவடிக்கைகளுக்காக இச்சம்பவம் குறித்த வழக்கு பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


