ஷா ஆலம், ஆக. 22- குவாந்தான் விமானப்படை தளத்தில் அரச மலேசிய விமானப்படையின் (டி.யு.டி.எம்.) F/A-18D ஹோர்னெட் போர் விமானம் நேற்றிரவு 9.05 மணியளவில் விபத்தில் சிக்கியதை ராயல் மலேசிய விமானப்படை உறுதிப்படுத்தியது.
இதன் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்திய நிலவரங்கள் குறித்து அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் ஆகாயப்படையின் பொது உறவுப் பிரிவு தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆருடங்களை வெளியிடவோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆகாயப் படையின் விமானம் விபத்துக்குள்ளானது
22 ஆகஸ்ட் 2025, 2:31 AM




