ஜகார்த்தா, ஆகஸ்ட் 21 - இந்தோனேசியா ஜகார்த்தாவில் ஏற்பட்ட ரிக்டர் அளவு 4.9ஆக பதிவான நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவில் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
ஆனால், இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் நேரப்படி இரவு மணி 7.54 அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்தது.
பெகாசி நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா மட்டுமின்றி, டெபொக், பொகோர் மற்றும் பூர்வகர்த்தா உள்ளிட்ட அருகில் இருக்கும் நகரங்களிலும் மிதமான மற்றும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளையும் உயரமான கட்டிடங்களையும் விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் எட்டு வீடுகள் சேதமடைந்தில், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டதாக கரவாங் மாவட்ட பேரிடம் நிர்வகிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பெர்னாமா




