கோலாலம்பூர், ஆக. 21 - நாட்டின் சட்டச்சூழல் அமைப்பு மிகவும் சீரானதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பிரத்தியேகமாக சட்ட அமைச்சை உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
சட்ட இறையாண்மைமயை மேம்படுத்துவதும் முயற்சிகளில், குறிப்பாக ஆசியான் உறுப்பு நாடுகளுடனும் பிராந்திய பங்காளிகளுடனும் மலேசியா மிகவும் அர்த்தமுள்ள வகையில் தொடர்பு கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என்று அவர் கூறினார்.
நமது அண்டை நாடுகளின் சிறந்த நடைமுறைகளுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் மலேசியா மிகவும் நியாயமான மற்றும் பதிலளிக்கக்கூடிய பிராந்திய ஒழுங்கை வடிவமைக்கக்கூடிய வலுவான நிலையில் இருக்கும் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற 2025 ஆசியான் சட்ட ஆய்வரங்கில் முக்கிய உரையை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட், துணை அமைச்சர் எம் குலசேகரன் மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் காவோ கிம் ஹவுர்ன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைமைத்துவத்தின் முக்கிய கருப்பொருளாக மலேசியா உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அன்வார் தமது உரையில் தெரிவித்தார்.
உள்ளடக்கம் என்பது சட்டங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் பயனளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
சட்ட அமைச்சை உருவாக்குவது குறித்து மலேசியா பரிசீலனை - பிரதமர்
21 ஆகஸ்ட் 2025, 6:21 AM