கோலாலம்பூர், ஆக. 20 - வழக்குகளில் சாட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்கள் மற்றும் அவற்றைப் பதப்படுத்துவதற்கான உபகரணங்களை உள்ளடக்கிய 4 கோடியே 43 லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்களை கோலாலம்பூர் போலீசார் அழித்தனர்.
அழிக்கப்பட்ட பொருள்களில் 2009 முதல் 2004 வரை நடத்தப்பட்ட 21,293 வழக்குகளில் சாட்சிப் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்ட 839 கிலோகிராம் போதைப்பொருள் மற்றும் 1,345 லிட்டர் திரவம் ஆகியவையும் அடங்கும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
மாநில காவல்துறைத் தலைவரின் நிரந்தர உத்தரவு டி207 (வழக்கு பொருட்கள் அழிப்பு) விதிகளுக்கு ஏற்ப கோலாலம்பூர் காவல்துறை போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவால் அனைத்து வழக்குப் பொருள்களும் நெகிரி செம்பிலான், புக்கிட் பெலாண்டோக்கில் உள்ள குவாலிட்டி ஆலம் சென். பெர்ஹாட் குபபை சுத்திகரிப்பு மையத்தில் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அழிக்கப்பட்ட போதைப் பொருள்களில் 2.7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 245.56 கிலோ மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன், 140.39 கிலோ எம்.டி.எம்.ஏ. (வெ.70.1 லட்சம்), 87 கிலோ ஹெரோயின் (வெ.2.1 லட்சம்) மற்றும் 199.09 கிலோ கஞ்சா (வெ.59 லட்சம்) ஆகியவையும் அடங்கும்.
1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி, 39ஏ(2), 39ஏ(1) மற்றும் பிரிவு 6 ஆகியவை சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை அந்த போதைப் பொருள்கள் உள்ளடக்கியிருந்தன என அவர் குறிப்பிட்டார்.
என்று கோலாலம்பூர் காவல் துறை தலைமையக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் போதைப்பொருள் வழக்கு சாட்சிப் பொருள்களை அகற்றும் நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.


